உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; யார் ராஜா என்று பார்த்துவிடுவோம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் என்றும், நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் அநுர அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே அரச பதவிக்குத் தகுதியானது ஜே.வி.பியா அல்லது உண்மையிலேயே பொதுமக்களுடன் இணைந்து நிற்கும் அரசியல் இயக்கமா என்பதை மக்கள் முன்னிலையில் அறிந்துகொள்ள முடியும். இனியாவது விவசாயிகளை அவமதிப்பதை ஆளும் தரப்பு நிறுத்த வேண்டும்.

இத்தகைய அவமதிப்புகளைச் செய்வதற்கு முன், தங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசால் உரிய தீர்வை வழங்க முடியாவிட்டால், நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான, யதார்த்தமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதற்கு எங்கள் தரப்பு தயாராக இருக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

36 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

56 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0