வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு.!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து இன்று (02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது மோட்டார் குண்டுகள் 04, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -02 , ரீ- 56 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் 75 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன .
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.