உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
94 பார்வைகள்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பாலத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், உந்துருளியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் திரியாய் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை கமலநாதன் மற்றும் 75 வயதுடைய சரவணமுத்து சிவராஜா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

திரியாய் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தனிப்பட்ட வேலை நிமித்தம் திரியாயிலிருந்து இறக்கக்கண்டி நோக்கி உந்துருளியில் பயணித்துள்ளனர். இதன்போது, சலப்பையாறு பாலத்தைக் கடந்து வளைவுப் பகுதியில் பயணித்தபோது, எதிர்த் திசையில் வந்த ‘பிக்கப்’ ரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி உந்துருளியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த பிக்கப் ரக வாகனத்தின் பின்புற சில்லிலிருந்து திடீரென காற்று வெளியேறியமையால், வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இழுத்துச் சென்று உந்துருளி மீது மோதியுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0