அனைத்து மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகள் – பிரதமர் உறுதி.!
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய கல்வி முறைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலுமிருந்து 66 அணிகள் பங்கேற்ற இப்போட்டி, கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. “ரோபோக்கள் கலாசாரத்தைச் சந்திக்கின்றன” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது புத்தாக்கங்களை காட்சிப்படுத்தினர்.
மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் கவனம் செலுத்துவதுதேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், இத்தகைய போட்டிகள் இளம் தலைமுறையின் தர்க்க சிந்தனை மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்த உதவுகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.