உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பருத்தித்துறை நகர சபையில் உள்ளூராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாதமும் இன்று.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பருத்தித்துறை நகர சபையின் 2025ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மங்கல விளக்கேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை மற்றும் தலைமை உரை ஆகியவை இடம்பெற்றன.


இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சன சமூக நிலைய உறுப்பினர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் கலந்துகொண்டதுடன், முன்னாள் நகரசபை செயலாளர் அ.அ. நடராசா, உப தவிசாளர் தேவராஜேந்திரம் மற்றும் உறுப்பினர்கள் உட்படபலரும் பங்கேற்றனர்.


மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0