எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது – சிபிசி தலைவர் தெரிவிப்பு.!
மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், “இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் இருக்காது என்பதை உறுதிப்படுத்த முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த மார்ச் 21 நள்ளிரவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில்,ஆட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.382 ஆகவும்,சூப்பர் டீசல் ரூ.443 ஆகவும்,மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், “இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் இருக்காது என்பதை உறுதிப்படுத்த முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 21 நள்ளிரவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில்,ஆட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.382 ஆகவும்,
சூப்பர் டீசல் ரூ.443 ஆகவும்,ஆக்டேன் 95 பெட்ரோல் ரூ.455 ஆகவும்,ஆக்டேன் 92 பெட்ரோல் ரூ.398 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.