உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சேவையை முடக்கி போராடுவோம்’ பொது மலசலகூட விவகாரத்தில் யாழ் மாநகர சபைக்கு இ.போ.ச எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தின் நிர்வாகம் தொடர்பாக யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய பேருந்து நிலையம் சில மணி நேரங்கள் பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டது.


முன்னதாக, பல தரப்பினரின் கோரிக்கையை அடுத்து கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த மலசலகூடத்தை அமைக்கும் திட்டம் அனுமதிக்கப்பட்டிருந்தது. இலங்கை போக்குவரத்து சபையின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்பில் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதியும் அதே நிறுவனத்திடமிருந்தே பெறப்பட்டிருந்தது.


ஆனால், கடந்த 13ஆம் திகதி இந்த மலசலகூடத்தை குத்தகைக்கு விடுவதற்காக மாநகரசபை தனிச்செயலாக விண்ணப்பங்களை அழைத்தது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது.இந்நிலையில், இன்று காலை நீர் இணைப்பு வழங்க மாநகரசபை ஊழியர்கள் முயன்றபோது, போக்குவரத்து சபை அதிகாரிகள் அதனைத் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை போக்குவரத்து சபை, குறித்த நிலப்பரப்பு தங்களது கட்டுப்பாட்டிலுள்ளதாகவும், மாநகரசபை தனிச்செயலாக நிர்வகிக்க முயன்றால் சேவைகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளது.


மாறாக, மாநகரசபை உறுப்பினர்கள், இது அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பு என்பதுடன், பொதுமக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தைத் திறப்பதில் தாமதமோ தடையோ ஏற்பட்டால் பொலிஸ் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் திறக்கப்படும் என வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0