உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மலையகத் தமிழர் உரிமைகள் குறித்து ஜெர்மன் தரப்புடன் மனோ கணேசன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மலையகத் தமிழர்களின் வீடு, வாழ்வாதார காணி உரிமை, பெருந்தோட்ட முறை மாற்றம், தொழிலாளர்களை பங்காளர்களாக மாற்றும் அவசியம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜெர்மன் தரப்புக்கு விளக்கமளித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் தூதுவர் ஃபீலிக்ஸ் நியுமன் அவர்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து இந்த விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர்.


இந்த சந்திப்பில், மலையகத் தமிழர்கள் தனித்த தேசிய சிறுபான்மை இனமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும், அவர்களை வெறும் தொழிலாளர் பிரிவாக மட்டும் காட்டும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பதையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளாவிய உதவிகள் உண்மையில் மிகவும் பின்தங்கிய மக்களை அடைகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேவேளை, ஜெர்மனியில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் நலவுரிமை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு, நிலச்சார்பற்ற சமூக சபை முன்மொழிவை மேம்படுத்த விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெர்மன் தூதுவர், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் தமக்கு தெளிவு இருப்பதுடன், இவ்விவகாரத்தில் தொடர்ந்து உரையாடலை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0