உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி: தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தவிசாளர் க. ஜெசீதன் தனது இயலாமையை காரணமாகக் காட்டி விசேட கூட்டத்தை நிறுத்தியதாக உறுப்பினர் பகீரதன் குற்றம் சாட்டிய நிலையில், சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.


நேற்று நடைபெற்ற அமர்வில் இந்த விவகாரம் எழுந்ததுடன், தவிசாளர் கடந்த சில வாரங்களாக இந்தியா பயணத்தில் இருந்த நிலையில், விசேட கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் காரணமாக உப தவிசாளரை தலைமையாகக் கொண்டு கூட்டத்தை நடத்த உறுப்பினர்கள் முயற்சித்தனர்.


ஒரு மூன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் கூட்டத்தை நடத்தலாம் என்ற விதிமுறைக்கு அமைவாக 11 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டபோதும், அந்த கூட்டத்தில் தமக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தால் தவிசாளர் கூட்டத்தை நிறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், தவிசாளர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினரே உட்பட பல உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால் சபையில் அமளி நிலை ஏற்பட்டது.பின்னர், நிறுத்தப்பட்ட கூட்டத்தை எதிர்காலத்தில் எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து, அதனை குழுநிலை கூட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0