உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கிளினிக் நோயாளர்களுக்கு ஒரே தடவையில் இரு மாதங்களுக்குரிய மருந்துகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி எரிசக்தி முகாமைத்துவத்தை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோயாளர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின் வழமை போன்று கிளினிக்குகளுக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிலையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு கிளினிக்குகள் செயற்பட்டு வருகின்றன.

எரிசக்தி நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ள போதிலும், வைத்தியசாலைகளின் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0