உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பேருந்து கட்டணங்கள் 10 வீதத்தால் உயர்வு – அமைச்சரவையில் இன்று இறுதி முடிவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் நெருக்கடியான சூழலைக் கருத்திற்கொண்டு, பேருந்து கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ யோசனையை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணங்களை உயர்த்துமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில், நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போதே, தற்போதைய செலவீனங்களுக்கு ஏற்ப 10 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன், புதிய பேருந்து கட்டண விவரங்கள் மற்றும் அது நடைமுறைக்கு வரும் திகதி என்பன குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0