உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை ஹொங்கொங்கிலிருந்து ‘கதே பசிபிக்’ விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0