உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 410 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 66 ஆயிரத்து 65 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் இந்தியாவிலிருந்து 27 ஆயிரத்து 353 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, சீனா, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி சபையின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதில் சுற்றுலாத்துறையின் இந்தத் திடீர் எழுச்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0