உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 16.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
79 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விட்ட இடத்தை பிடிக்க, நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரும். பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக எந்த ஒரு வேலையையும் கையில் எடுக்கவே வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் காட்டுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். கூடா நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். குழப்பத்திற்கு உண்டான தீர்வுகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கடன் சுமை தீரும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சின்னச் சின்ன தடைகள் தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறையோடு செயல்படுங்கள். தெரியாத மூன்றாவது நபரை நம்பாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆச்சரியங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். பெரிய பெரிய பிரச்சினைக்கு கூட சுலபமாக தீர்வு கிடைக்கும். இறையருள் பரிபூரணமாக கிடைக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நாளாகவும் அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தை பொறுத்தவரை முதலீட்டில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது ஜாக்கிரதை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். கலைஞர்கள் மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையப்போகிறது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். பகை விலகும் நாள். சந்தோஷம் பிறக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீராத பகை தீரும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். குழப்பங்களுக்கு உண்டான நல்லதொரு தீர்வு கிடைக்கும் நாள் இன்று.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0