உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 11.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
80 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்த நபருடன் நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். இன்றைக்கான நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஒரு நிமிடம் கூட ஓய மாட்டீர்கள். இன்றைக்கான ஓட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் சோர்வு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள். உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். எந்த இடத்தில் எல்லாம் அதிகமான தோல்வி உங்களுக்கு கிடைத்ததோ. அந்த இடத்தில் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வெற்றி கிடைக்கும் நாள் இன்று. பெரியவர்களின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் தேவை. எதிர்ப்புகளை, எதிர்கொள்ளும் தைரியம் தேவை. யாரைக் கண்டும் பயந்து நடுங்கக் கூடாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுங்கள். உங்களுடைய மடியில் கனமில்லை. வழியில் பயம் தேவையே இல்லை. இறைவன் மீது பாரத்தை போட்டு நேர் பாதையில் பயணம் செய்யுங்கள். நல்லது நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத பரிசு பொருட்கள் எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். கடன் சுமை குறையும் சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெயர் புகழ் அந்தஸ்து பாராட்டு உயரும். இனிப்பான விஷயங்கள் காதுகளில் விழும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு ஒரு பெரிய வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தைரியமாக செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் குழப்ப நிலையில் இருப்பீர்கள். புது முடிவுகளை எடுக்கும்போது கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். யாரையும் அனாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கப் போகிறீர்கள். பெரிதாக ஆர்ப்பாட்டம் பிரச்சினை என்று வந்தால் கூட உங்களுடைய மௌனம் மட்டுமே நல்ல பதிலாக இருக்கும். அதிகமாக பேச மாட்டீர்கள். உங்களுடைய கடமையில் மட்டும் ரொம்ப கவனமா இருப்பீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் தானாக விலகும் நாள் இன்று.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். பண பிரச்சினை தீரும். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வேலையில் பிரச்சினையாக இருந்த விஷயங்கள் எல்லாம் படிப்படியாக சரியாகும். வியாபாரத்தில் முன்னேற தேவையான வழி பிறக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலையில் முன்கோபம் வேண்டாம். வியாபாரத்தில் அவசரம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று. இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

62 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0