உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
87 பார்வைகள்

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களை குறித்த சட்டத்துக்குள் கொண்டு வருவதால் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிராக மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாகைகளில் ‘கிராமிய சேமிப்பு திட்டங்களை அளித்து நிதி நிறுவனங்களுக்கும் வட்டிக்காரர்களுக்கும் வாய்ப்பளிக்காதே , ‘இச்சட்டம் பெண்களை அடிமையாக்க நுண் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது, இச்சட்டம் சுய உதவி குழுக்களின் சேமிப்புகளை ஆபத்திற்குள் தள்ளுகிறது, அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் ஒரே வழியான சமூக சேமிப்பு திட்டங்களை தடை செய்யாதே, ‘நாங்கள் இச்சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஏழைகள் சமூகமட்ட சேமிப்பு இல்லாமல் எதிர்கொள்ளப்போகும் அவலநிலையை மீள் பரிசீலனை செய்யுங்கள்’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவர்களாக பெண்கள் காணப்பட்டனர்.

தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதிக்கான மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த மகஜரை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0