உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 02.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
82 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். எந்த வேலையை செய்வது, எந்த வேலையை செய்யக்கூடாது, யாரிடம் இந்த பிரச்சினையை சொல்லுவது, யாரிடம் உதவி கேட்பது என்று எல்லா விஷயத்திற்கும் குழம்பிப் போய் நிற்கக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், எல்லா வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு 5 நிமிடம் இறைவழிபாடு செய்துவிட்டு, மனதை அமைதிப்படுத்தி பிறகு உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களை விட்டுப் போன மரியாதை எல்லாம் மீண்டும் திரும்ப பெறுவீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய நாளாக தான் இந்த நாள் அமையப் போகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் பிரச்சினை, எந்த ஒரு விஷயத்தை பேசினாலும் நாலு பேர் முட்டுக்கட்டை போடுவார்கள். உங்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ, அந்த வேலையை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் பேச்சுக்கு செவி சாய்த்து, வரும் வாய்ப்பு கைநழுவ விட வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்யப் போகிறீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வத்தோடு இருப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமாக ஆசை இருக்கும். பேராசை பெரு நஷ்டம் என்று சொல்லுவார்கள். உங்களுடைய பேராசையால் நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வது உங்களுடைய வேலை. எந்த விஷயமாக இருந்தாலும் அளவோடு ஆசைப்படுங்கள். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். அரசுக்கு புறமான காரியங்களில் ஈடுபடாதீர்கள். சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க, ஆசைகளை குறைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப அவசியம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து பிரச்சினை சரியாகும். உறவுகள் பிரச்சினை சரியாகும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வீட்டில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் தொடங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவது எதிர்காலத்திற்கு நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனமகிழ்ச்சி இருக்கும் நாள். நீண்ட நாள் துன்பங்கள் உங்களை விட்டு விலகும். தேவையற்ற பழிச் சொல்லிலிருந்து விடுபடுவீர்கள். குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட்டு இரவு நிம்மதியான தூக்கத்தை அடைவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் மேலும் நன்மைகளை பெறலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு வீடு தேடி வரும். கடன் சுமை குறையும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கும். மனக்குழப்பம் நீங்கும். கட்டுமான தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை பெற்று தரும். துன்பத்தை கண்டு துவண்டு போகக் கூடாது. எதிர்த்து போராடும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. முன்கோபம் வேண்டாம். அவசரம் வேண்டாம். நிதானமாக சிந்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சனைகள் இருக்கும். சுற்றி இருப்பவர்களால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு செயல்பட வேண்டும். கூடுமானவரை அனாவசிய செலவை குறைப்பது எதிர்காலத்திற்கு நன்மையை தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடும் பக்குவத்தோடும் நடந்து கொள்வீர்கள். யாரிடமும் வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் போக மாட்டீர்கள். ஆனால் பிரச்சினைகள் மட்டும் உங்களை தேடி தானாக வரும். எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி வாகை சூட கூடிய நாள். நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள். வாழ்க்கைக்கு தேவையான முன்னேற்றத்தையும் கடவுள் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பான். கவலைப்படாதீர்கள் கடமையை செய்தால் வெற்றி நிச்சயம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0