உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையை வகுக்கக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை – பிரதமர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையொன்றின் அவசியத்தை மாணவர் சங்கங்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான கொள்கை வரைபைத் தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும், அதில் மாணவர் சங்கங்களின் கருத்துக்களை முன்வைக்குமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் பெப்ரவரி 27ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலின்போது, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினர் விரிவாக விளக்கமளித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்தை எவ்வகையிலும் மட்டுப்படுத்தப் போவதில்லை எனவும், இது குறித்து எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மருத்துவப் பட்டம் பெற்றவர்களுக்கான உள்ளகப் பயிற்சியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தங்குமிடப் பிரச்சினைகளே பிரதான காரணம் எனவும், இதற்குத் தீர்வுகாணச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்ளகப் பயிற்சியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மேலதிகமாக ஐந்து வைத்தியசாலைகளுக்கு அங்கீகாரம் கோரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

வயம்ப, குருநாகல், குளியாப்பிட்டிய, சபரகமுவ மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல்கலைக்கழக மருத்துவப் பீட மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காணிகளைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த மறுகணமே கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அத்தோடு, குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பீடங்களில் பயிற்சியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மருத்துவப் பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், பயிற்சிக்குப் பின்னரான நியமனங்களை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் அழைப்பாளர் நவோத்ய மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0