தங்க விலை சடுதியாக உயர்வு.!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று ஒரே நாளில் பல தடவைகள் தங்க விலை அதிகரித்துள்ளது.அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 410,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,300 ரூபாவாக, விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,413 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.