போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்களுக்கு தடை.!
மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை விமான சேவை நிறுவனமும் ஃபிட்ஸ் எயார் நிறுவனமும் தீர்மானித்துள்ளன.மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக, இலங்கையிலிருந்து புறப்படும் மற்றும் இலங்கைக்கு வருகை தரும் பயணிகளின் வசதிக்காக சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் விமான நிலையத்துக்கு செல்லும் முன் தங்கள் விமான சேவை முகவர் நிலையத்துடன் தொடர்பு கொண்டு தகவல் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. இதனால் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.