புதிய சுற்றுச்சூழல் சட்டம் குறித்து கிளிநொச்சியில் தெளிவூட்டல் கலந்துரையாடல்.!
சுற்றுச்சூழல் அமைச்சின் ஏற்பாட்டில் புதிய சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் ரவீந்திர காரியவசம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்டத்தின் நான்கு பிரதேசச் செயலாளர்கள், சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.