உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நீக்க கோரி மன்னாரில் கையொப்ப சேகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மன்னார் பஜார் பகுதியில், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை நீக்கக் கோரி இன்று (28) சனிக்கிழமை மதியம் கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கையொப்ப சேகரிப்பைத் தொடர்ந்து ஊடகச் சந்திப்பும் நடைபெற்றது. அதில் ஜாட்சன் பிகிராடோவும் சட்டத்தரணி செல்வராசா டினேசன் அவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.

நாட்டில் பயங்கரவாதச் சூழல் நிலவாத நிலையில் இத்தகைய சட்டம் தேவையற்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மக்களை ஒடுக்கக்கூடிய சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இச்சட்டமூலத்தை எதிர்த்து தொடர்ச்சியான ஜனநாயக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0