உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கடன் திட்டத்தின் வட்டி வீதத்தில் 4 சதவீதத்தை அரசாங்கமே ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வீடமைப்பு, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன்களுக்கு 96,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராமிய இளைஞர்கள் தங்களது திட்டங்களை முன்வைத்து நிதி பெறும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேபோல், அரச சேவைக்காக 73,000 பேரை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், பொலிஸ் துறைக்கு 10,000 பேரை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார முன்னேற்றத்தின் பயன்களை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.டித்வா’ சூறாவளி பாதிப்புகளுக்காக கூடுதலாக 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இழப்பீடு தொகைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக பணம் அச்சிடப்படவில்லை என்றும், திறைசேரியில் இருந்த நிதியே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வறுமையை ஒழிப்பது அரசின் முக்கிய இலக்காகும் என்றும், அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பிற்கு 11,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

37 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0