உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டது இலங்கை இராணுவம் – சரத் வீரசேகர.!
இலங்கையில் போர்க்குற்றங்கள் அல்லது இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், போர்க் காலத்தில் பயங்கரவாத அமைப்புத் தலைவர் பிரபாகரன் சுமார் மூன்று இலட்சம் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்ததாகவும், அவர்களில் சுமார் இரண்டு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் பேரை இலங்கை இராணுவம் மனிதாபிமான அடிப்படையில் மீட்டதாகவும் கூறினார்.
உலக வரலாற்றில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை மீட்ட ஒரே படை இலங்கை இராணுவமே எனவும் அவர் குறிப்பிட்டார். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் முறையாக மீள்குடியமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இலங்கை இராணுவம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவில் உள்ள சில தமிழ் மாணவர் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.