ஏழு இலட்சம் ரூபா பெறுமதியுள்ள போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!
சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியுடைய போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபர் ஒருவர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊரகஸ்மங்ஹந்திய யுத்தபிட்டிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஊரகஸ்மங்ஹந்திய, கைலத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1,340 போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஊரகஸ்மங்ஹந்தியிலிருந்து கொஸ்கொட நோக்கி விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஒரு போதை மாத்திரையை 500 ரூபா விலையில் விற்பனை செய்து வந்ததாகவும், கைப்பற்றப்பட்ட மொத்த மாத்திரைகளின் பெறுமதி சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா (கிட்டத்தட்ட 7 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.