சுரேஷ் சலே கைது விவகாரம்: சபையில் கடும் விவாதங்கள் எதிர்பார்ப்பு.!
நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்கான முதலாவது வார அமர்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளதாக குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அமர்வுகளின் போது மார்ச் 4 ஆம் திகதி நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், மார்ச் 5 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான சவால்கள் மற்றும் உரிமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் மற்றும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் விசேட விவாதங்கள் நடைபெறவுள்ளன. இவ்விடயங்களை முன்னிட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் உருவாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.