உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக் காவலில் – பாதுகாப்பு அமைச்சு அனுமதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அரசுப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முக்கிய முன்னேற்றமாக, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 25 ஆம் திகதி பேலியகொட பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய ‘சானல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில், ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சலேவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சமூக மற்றும் சமய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய ரொஹான் டி சில்வா அடிகளார் அளித்த முறைப்பாட்டின் பேரிலேயே விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலத்தில் சுரேஷ் சலே மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவர் அரசுப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், அவர் ஓய்வுபெற்றார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த 90 நாள் தடுப்புக் காவல் விசாரணையின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

38 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0