உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அச்சம் பரப்ப சிலர் முயற்சி செய்கின்றனர் – ஜனாதிபதி தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என கூறி முதலீட்டாளர்களை அச்சப்படுத்த சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டிலும் பல்வேறு மாதங்களை குறிப்பிடப்பட்டபோதிலும், பொருளாதாரம் நிலைத்தன்மையை எட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அநுராதபுரம், கொரகஹவெவவில் உள்ள வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.தற்போது நாட்டின் பொருளாதாரப் பயணம் சீராக முன்னேறி வருவதாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லாத நாட்டில் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதாரண மக்களுக்கு பொருளாதார நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இவ்வருடம் 31,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

டிட்வா சூறாவளி காரணமாக மேலும் 20,000 வீடுகள் தேவையாகியுள்ளன. 6,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், சுமார் 15,000 வீடுகள் மீள்குடியேற்றத்திற்குத் தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 51,000 வீடுகள் நிர்மாணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மாகாண சபைகளுக்கு 15,000 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராமிய வீதிகள் அவ்வளவில் அபிவிருத்தி செய்யப்படும். கிராமிய வீதிகளை மேம்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0