உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஆரோக்கியா திட்டத்திலிருந்து விலக தீர்மானம் – ஹன்சமால் வீரசூரிய தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி முதல் விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.


தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும், நோயாளர்களுடன் இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனத் தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பில் தமது சங்கம் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்ட போதிலும், கோரிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் சாதகமான பதில் இன்மையே வருத்தத்திற்குரியதாகும் எனவும் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0