உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர்பிரியங்கர ஜயரத்ன எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.அத்துடன், இவ்வழக்கின் முதலாவது சாட்சியாளர் மார்ச் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு அழைப்பாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில், 2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் கோரியதன் பேரில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை விடுவித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்ததாகக் கூறி, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0