உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான விசேட செயலமர்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் “ஒன்றிணைந்து கூட்டுறவு அபிவிருத்தி திட்டம்” எனும் திட்டத்தின் கீழ், பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்கள், அதேபோல் சமாசங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான மாவட்ட மட்ட விசேட செயலமர்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.


இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பனை மற்றும் தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான செயலமர்வும் இடம்பெற்றது.


“மனப்பாங்கு மாற்றமும் ஆற்றல் விருத்தியும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வுகளில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறை விரிவுரையாளர் ரட்ணம் சர்வேஷ்வரா விரிவுரையாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு உரிய “ஐக்கிய தீபம்” பத்திரிகையும் இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0