உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராகக் கருதப்படும் ‘கமாண்டோ சலிந்த’ என அழைக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக ‘கமாண்டோ சலிந்த’ அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0