நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!
காலி – பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (26) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதும், காணாமல் போனவர் 29 வயதும் உடையவர்கள் எனவும் இவர்கள் இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையினர், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் மற்றும் பெந்தோட்டை பொலிஸார் இணைந்து காணாமல் போயுள்ள நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.