உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பலகட்சி ஆட்சிமுறையை அழிப்பதற்கு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

பலகட்சி ஆட்சிமுறையை இலங்கையில் இருந்து அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் தொடர்பில், எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்றுமுன்தினம் கூட்டுக் கலந்துரையாடலை நடத்தியிருந்தன. இதன்போதே, “பல கட்சி ஆட்சிமுறைக்கு இலங்கையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த கடுமையாகப் போராட வேண்டும்.” என்று ரணில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டின் ஜனநாயகத் தத்துவங்களுக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகா சங்கத்தினர் அவமதிக்கப்படுகின்றனர். போலியான குற்றச்சாட்டுக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

இத்தகைய செயற்பாடுகளை நாம் தீர்க்கமாக எதிர்க்க வேண்டும். நாட்டின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

51 0 0