உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் வந்து குவிய கூடிய நாளாக இருக்கிறது. நீண்ட நாள், நீங்கள் முயற்சி செய்த காரியங்கள் வெற்றி அடையும். மேலும் மேலும் வாழ்க்கையின் உயர்ந்த இடத்திற்கு செல்ல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத வெற்றி உண்டு. மனது சந்தோஷத்தில் நிறைவாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக எந்த பிரச்சினையும் இருக்காது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், இறைவழிபாடு என்று இந்த நாள் இனிமையாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. நிறைய நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகிறது. புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். நீண்ட தூரப் பயணங்கள் இனிதாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். பல நாள் கஷ்டத்திற்கு இன்று ஒரு விடிவு காலம் பிறக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடமையிலிருந்து தவறாத உங்களுக்கு, கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். எந்த இடத்திலும் மனம் தளராமல் முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்னச் சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். சோம்பேறித்தனம் வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடாது. நேர்மையாக நடக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது. இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணை தேவை. நண்பர்களையோ, மேலதிகாரிகளையோ பகைத்துக் கொள்ளக் கூடாது. நிதானத்தோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாள் தான்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் வாங்க வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகவும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் பஞ்சாயத்துக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கவனமாக செயல்பட வேண்டும். அலட்சியம் கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது. சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு முடித்து தர முடியும் என்றால் மட்டும் வாக்கு கொடுக்கவும். வாக்கு கொடுத்து விட்டு வேலையை முடிக்கவில்லை என்றால் கெட்ட பெயர் வந்துவிடும். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷமான, பாசம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவி குழந்தைகள் என்று குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நிலை உண்டாகும். உங்களை சுற்றி இருப்பவர்களே, உங்களுக்கு எதிராக நடந்து கொள்வார்கள். சொந்த பந்தங்களோடு ஒற்றுமை இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் சிக்கல்கள் வரும். கவனமாக இருக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். எந்த விஷயத்திலும் அவசரப்படாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மனநிம்மதி அடைவீர்கள். பண கஷ்டம் நீங்கும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபட தக்க சமயத்தில் உதவிகளை பெறுவீர்கள். நண்பர்களுடைய உதவி, உறவினர்களுடைய உதவி இன்று உங்களுக்கு கை கொடுக்கப் போகிறது. சுற்றி இருப்பவர்களுடைய அருமை பெருமைகளை புரிந்து கொள்ளக்கூடிய நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சின்ன சின்ன அளவில் கிடைக்கும் குடும்ப சந்தோஷம் கூட, பெரிய அளவில் மனதை அமைதிப்படுத்தும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0