உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான பரீட்சை இன்று நிறைவடைகிறது.

கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை முடிந்த பின்னர் சில மாணவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட நிலை காணப்பட்டதையடுத்து, இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பரீட்சை முடிவை முன்னிட்டு மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் நடத்தை குறித்து அவதானம் செலுத்தி, ஒழுங்கீன செயல்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

51 0 0