உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜப்பான் பேரரசரின் பிறந்தநாள் வரவேற்பு நிகழ்வு கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஜப்பான் பேரரசரின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் ஏற்பாடு செய்த விசேட வரவேற்பு நிகழ்வு நேற்று (25) கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய ஜப்பான் தூதுவர் இசொமதா, 1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, இறுதிவரை தளராத மனவலிமையுடன் ஓடி முடித்த இலங்கை தடகள வீரர் ரணதுங்க கருணாநந்தாவின் சாதனையை எடுத்துக்காட்டாகக்குறிப்பிட்டார்.


அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியையும் முன்னேற்றத்தையும் பாராட்டிய அவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட யென் கடன் உதவித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.


இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜப்பான் பேரரசருக்கும் ஜப்பான் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுகூர்ந்த அவர், முதலீடு, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


நிகழ்வில் ஜப்பானிய பாரம்பரியக்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மலர் அலங்காரம், பாரம்பரிய பொம்மைகள், சாமுராய் தலைக்கவசங்கள் மற்றும் கராத்தே காட்சிகள் இடம்பெற்றன. மேலும், விருந்தினர்களுக்கு ஜப்பானிய பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.இலங்கை–ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

51 0 0