விவசாயிகளுக்கு முழு உரிமைப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் நாளை ஆரம்பம் – ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு.!
அனுமதிப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் தேசியத் திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் அடிப்படையில் காணிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் மக்களுக்கு, அந்தக் காணிகளுக்கான முழுமையான உரிமையை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவவில் உள்ள வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.