உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த இன்சாத் பானு என்பவர் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 34 வாரங்கள் பூர்த்தியடையும்முன் ஒரே தடவையில் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.


இந்த அரிய மற்றும் சிறப்பான பிரசவம் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிறந்த மூன்று குழந்தைகளும் நலமாக உள்ளதுடன், தாயாரும் சுகநிலையுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் நலன் வேண்டி வைத்தியசாலையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் வைத்தியர்கள், தாதிய மேற்பார்வையாளர், தாதியர்கள், மருத்துவத் தாதுகள் மற்றும் சுகாதார சேவை உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் நிறைவில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் தலைமையிலான குழுவினர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0