உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் நாளை (27) முதல் அப்பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.

இதனைத் தெரிவித்து அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.


டித்வா புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்திற்குப் பின்னர் 93 நாட்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் காலப்பகுதி முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது தொடர்ந்து பணியாற்றியதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முக்கிய இணைப்பாளர்களாக தாங்கள் செயல்பட்டதாகவும் அவை குறிப்பிடுகின்றன.மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நட்டஈடு மற்றும் மீளளிப்பு கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கள மட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இவ்வாறான அர்ப்பணிப்பான சேவைக்கு இணையான தீர்வுகள் தற்போதைய பிரச்சினைகளுக்கு வழங்கப்படாததாலும், அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாததாலும் தான் கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்ததாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0