உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் சட்டிகள் அழிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு
உத்தரவிட்டார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிநடத்தலில் சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வாராந்த உணவு நிலையப் பரிசோதனையின் போது தயிர் விற்பனை தொடர்பாகக் இரகசியத் தகவல் ஒன்று கிடைத்திருந்தது.

இதற்கமைய செயற்பட்ட பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட தயிரின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன்போது தயிரின் நிலையைப் பார்வையிட்ட நீதிமன்ற நீதவான் சம்பந்தப்பட்ட விற்பனையாளரை கடுமையாக எச்சரித்ததுடன் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கினை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

அத்துடன் இது போன்று விதிமீறல்களில் ஈடுபட்ட 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரம் மற்றும் காலாவதித் திகதி குறித்து அவதானமாக இருக்குமாறும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

13 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

71 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0