உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
78 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களுடைய கனவு நனவாவதற்கு இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்பார்த்ததை விட நிறைய இலாபத்தை எதிர்காலத்தில் அடைவீர்கள். இன்று கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் இழந்த சொத்துக்களை மீண்டும் அடைவதற்கு நல்ல வாய்ப்புகள் வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரி தொல்லை நீங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சாந்தமான அமைதியான நாளாக இருக்கும். பெரிதாக எந்த பஞ்சாயத்தும் இருக்காது. வேலையும் வியாபாரமும் சுமூகமாக எப்போதும் போல நடக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு அமைதியை தரும். புது அனுபவத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வீர்கள். பல நாள் செய்த தவறை எண்ணி இன்று வருத்தப்படுவீர்கள். செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடுவீர்கள். முக்கியமா செய்த தவறை திருத்திக்கொள்வீர்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாசம் அன்பு காதல் என்று உங்கள் வாழ்க்கையே அழகாக இருக்கும். இதுநாள் வரை நீங்கள் பெறாத உணர்வை இன்று பெறுவதற்கு உண்டான வாய்ப்பை கடவுள் கொடுக்கப் போகின்றான். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அழகாக, உங்கள் கண்களுக்கு தெரியும். வாழ்க்கையை ரசித்து வாழக்கூடிய நாளாக இன்று அமையப் போகிறது. வேலையும் வியாபாரமும் சுமூகமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமையாக சிந்திப்பீர்கள். இலாப நோக்கத்தோடு சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய பேச்சு ஆற்றல் வெளிப்படும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். இந்த நாள் ரொம்ப ரொம்ப அழகான நாளாக இருக்கப் போகிறது. இதை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை தான். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்பும் மரியாதையும் இருக்கும். உங்கள் கை ஓங்கி நிற்கும். பட்ட அவமானத்திற்கு எல்லாம் பதில் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற வெற்றியை கடவுள் உங்களுக்கு கொடுக்க போகின்றான். கஷ்டங்களில் இருந்து விடுபட்டு மன நிம்மதி அடையக் கூடிய நாள் இன்று.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்லது நடக்கப்போகிறது. புது மனிதர்களின் சந்திப்பு நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொடுக்கும். நிறைய சொந்த பந்தங்கள் புதுசாக சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. திருமண பேச்சு வார்த்தை கை கோடி வரும். காதல் இனிக்கும். காதல், கல்யாணம் வரை செல்லும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் இலாபமாக மாறும். இதுபோல பல நன்மைகள் உங்களை இன்று சந்தோஷப்படுத்த போகிறது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். சுற்றி இருக்கும் நாலு பேரை சமாளிக்கவே போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கசப்பான அனுபவங்கள் நல்ல பக்குவத்தை உங்களுக்கு கொடுக்கப் போகிறது. இதற்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் தவறு கிடையாது.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதியான நாளாக இருக்கும். டென்ஷன் குறையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். தவிர்க்க முடியாத செலவுகள் தான். இருந்தாலும் கூடுமானவரை செலவை குறைப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் மன நிம்மதி, இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கொஞ்சம் மன குழப்பம், மனசலனம் இருக்க வாய்ப்பு உள்ளது. வேலைகளை சரியாக முடித்து விடுவீர்கள். கடமைகளில் இருந்து தவற மாட்டீர்கள். இருந்தாலும் ஏதோ ஒரு குறை உங்களை சஞ்சலப்படுத்தும். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0