உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 24.02.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
110 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மனது இன்று சந்தோஷமாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இரக்க குணம் வெளிப்படும் நாள். உங்களை நீங்களே பொது பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் ஆர்வம் காட்டுவீர்கள். எந்த இடத்தில் எல்லாம் தோற்றுப் போய் நின்றீர்களோ அந்த இடத்தில் எல்லாம் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி உங்களிடத்திலிருந்து வெளிப்படும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த இன்பமான நாளாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுடைய சந்தோசத்தில் ஒரு துளி கூட குறைய கூடாது என்று இருப்பீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். திறமை வெளிப்படும் நாள். அடுத்தவர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கப் போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும். சுறுசுறுப்பாக பெண்கள் செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எல்லோருக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். பணக்கஷ்டம் தீரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கவில்லையே என்று கவலையே பட வேண்டாம். இறைவன் உங்களுக்கான அனுகிரகத்தை இன்று கொடுத்து விடுவான்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணையோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல பெயர் கிடைக்கும் நாளாக இருக்கும். பெருமையாக உங்களுடைய வெற்றிகளை பேசலாம். யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தினார்களோ, அவர்களெல்லாம் உங்களோடு நட்புறவு வைத்துக் கொள்ள எண்ணுவார்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும் நாள். வெற்றிவாகை சூடும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிம்மதி கிடைக்கும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். அதற்கான பிராயசித்தத்தையும் தேடிக்கொள்வீர்கள். கஷ்டங்கள் விலகி செல்லும். நிம்மதியும் தூக்கமும் உங்களை சந்தோஷப்படுத்தும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தத்தன்மை வெளிப்படும். முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையை மட்டும் இன்று சரிவர செய்தால் போதும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது தடுமாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். இறைவழிபாடு செய்வது குழப்பத்திற்கான தெளிவை நிச்சயம் கொடுக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். ஆர்வக்கோளாறில் நிறைய நல்ல விஷயங்களை செய்து விடுவீர்கள். உங்களுக்கே, நீங்கள் செய்த வேலைகளை பார்த்து ஆச்சரியமாக இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். அதிர்ஷ்ட காற்று வீசும். பேச்சு திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கு கூட இன்று நல்ல முன்னேற்றம் இருக்கு.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். முயற்சிகளில் சின்னச் சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. துவண்டு போகக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். கைப்பேசி பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0