உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொழும்பு மாநகர சபையின் ஊழல் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நீடிப்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை, அதிகாரம் மற்றும் அரச வளங்கள் அல்லது வரப்பிரசாதங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் ,சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள், நியமனங்கள், கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறுதல், மற்றும் மேற்கூறிய செயல்களால் அரச சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு, பொதுமக்கள் தமது முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2026 மார்ச் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இது தொடர்பான எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,152, காலி வீதி,கொழும்பு 03 எனும் முகவரிக்கு அனுப்ப முடியும்.

சமர்ப்பிக்கப்படும் அனைத்து முறைப்பாடுகளிலும் முறைப்பாட்டாளரின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். எவரேனும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாவிடின் அது தொடர்பாக ஆணைக்குழுவிடம் கோர முடியும்.

அத்துடன், ஆணைக்குழுவிடம் வாய்மூலமாகத் தகவல்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது நபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம், 2026 மார்ச் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியைத் ஒதுக்கிக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0