உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், முழுமையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெறப்படும் வரை பணிகளைத் தொடர முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்குமுன் அப்பகுதியில் நிலம் சமப்படுத்தும் பணிகள் இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

.
1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும். இதன்படி, கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

49 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0