சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி இன்று பதவியேற்பு.!
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட சிவானந்தன் நிதர்சனம் இன்றையதினம் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.அவர் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அதன் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு, தனது கடமைகளை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் இணைந்து அவருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்