உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இரணைதீவில் சட்டவிரோத கடல் அட்டை பிடிப்பு – பத்து பேர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் சுழியோடி கடல் அட்டைகளை பிடித்த பத்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


சம்பந்தப்பட்ட பகுதிக்கு அப்பால் உள்ள மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, 29 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட மன்னார் பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள்கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0