தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரிக்கை.!
ஆறு ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான மற்றும் நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், விருப்பமின்றியும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்த கூட்டமைப்பு, கடந்த ஆறு ஆண்டுகளாக அநீதியான முறையில் மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தேசிய பொருளாதாரம், வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அறிக்கையில்வலியுறுத்தப்பட்டுள்ளது.உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.