சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற 81 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் 12.30 க்கு இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை எகலியாஹொட வந்து சிவனடிபாத மலைக்கு சோமபால என்பவர் அவரது குடும்பத்தினருடன் செல்லும் போது கடும் சுகயீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு இருந்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.