உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படுவதுடன் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்படும் மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இது அவர்களுக்கான இறுதி அறிவித்தலாகும் என அலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கட்டாக்காலியாக பிடிக்கப்படும் மாடுகளுக்கு பிரதேச சபையினால் ஒரு மாட்டுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும் ஒருநாள் பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நாட்களுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் இம்மாடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்கி ஏலத்தில் விற்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.

மேலும் இந்நாட்களுக்குள் நோய்வாய்ப்படும் மற்றும் இறக்கும் மாடுகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபை பொறுப்பேற்காது என்பதுடன் இம்மாடுகளின் சொந்தக்காரர்கள் இருப்பின் அவர்கள் தங்களின் மாடுதான் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தங்களின் பகுதி கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத் துண்டு (பண்ணைக் காட்) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பவற்றை ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இது தவிர தவறும் பட்சத்தில் பிரதேச சபையினால் பிடிக்கப்படும் மாடுகள் (கால் நடைகள்) பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

3 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0